/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு மூன்றரை ஆண்டு சிறை
/
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு மூன்றரை ஆண்டு சிறை
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு மூன்றரை ஆண்டு சிறை
ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வுக்கு மூன்றரை ஆண்டு சிறை
ADDED : அக் 27, 2024 01:18 AM
நாமக்கல், அக். 27-
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில், 2014ல் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றியவர் சதாசிவம், 64. இவர், கெஜகோம்பை கிராமத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அப்போது, நாமக்கல் சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்த கதிர்வேல், இருப்பிட சான்றிதழ் கேட்டு சதாசிவத்திடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதற்கு சதாசிவம், 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத கதிர்வேல், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய, 2,500 ரூபாயை, கதிர்வேல், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சதாசிவத்திடம் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதாசிவத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி விஜயகுமார், குற்றம்சாட்டப்பட்ட வி.ஏ.ஓ., சதாசிவத்திற்கு, மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.