/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழித்தட பிரச்னையால் மூவர் தீக்குளிக்க முயற்சி
/
வழித்தட பிரச்னையால் மூவர் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 01, 2025 01:09 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்., ஆயிபாளையம், ஓட்டபிள்ளையார் கோவில் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலம் வழியே, அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன், 55, மனைவி கிருஷ்ணவேணி, 50, மகன் சூர்யா, 28, ஆகியோர் வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதையில், கடந்த, ஆறு மாதத்திற்கு முன் அத்தனுார் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையின் இரும்பு துாண்களை, ஐந்து நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் வெட்டிச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று ஐயப்பன் வீட்டிற்கு எம்.சாண்ட் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று வந்தது. மணலை இறக்கிவிட்டு திரும்பி சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் டிப்பர் லாரியை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே, ஐயப்பன், கிருஷ்ணவேணி, சூர்யா ஆகிய மூவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் தீக்குளிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.