/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்திருந்த பெண் உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்திருந்த பெண் உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'
கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்திருந்த பெண் உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'
கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்திருந்த பெண் உள்பட 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 29, 2025 02:21 AM
நாமக்கல்;கொல்லிமலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக, நாமக்கல் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், கடந்த, 31ல், கொல்லிமலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கொல்லிமலை குண்டூர்நாடு, செங்காட்டுப்பட்டி, காப்புக்காடு பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, 40 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செங்காட்டுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி, 34, அவரது தந்தை பொன்னுசாமி, 57, தாயார் செல்வி, 54, ஆகிய, 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பழனிசாமி, பொன்னுசாமி ஆகிய இருவரையும் சேலம் மத்திய சிறையிலும், செல்வியை கோவை பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இவர்கள், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் எஸ்.பி., விமலா கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அவர்களது பரிந்துரை ஏற்று கலெக்டர் துர்கா மூர்த்தி, சாராயம் காய்ச்சிய செல்வி, பழனிசாமி, பொன்னுசாமி ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, மதுவிலக்கு போலீசார் அதற்கான நகலை, மூன்று பேரிடமும் வழங்கினர்.