/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துலுக்க சூடாமணியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
/
துலுக்க சூடாமணியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED : மார் 31, 2025 03:06 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் வரலாற்று பிர-சித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை கடைசி வாரத்தில் பூச்சாட்-டுதல் விழாவும், மாசி மாதம் முதல் வாரத்தில் கம்பம் நடும் விழாவும் பங்குனி கடைசி வாரத்தில் தேர் திருவிழாவும் நடப்பது வழக்கம்.
இந்தாண்டுக்கான தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 9ம் தேதி தேர் திருவிழா நடக்கவுள்ளது. சுற்று வட்டார பகுதிகளிலுள்ள மக்கள் வேண்டுதலுக்காக தினந்தோறும் கரகாட்டம், தெருக்கூத்து, கலை நிகழ்ச்சிகள் என நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் நடந்த விழாவில் காளியம்மன், மாரியம்மன், கருப்பசாமி வேடமணிந்த திருநங்கைகள் கையில் அக்னி சட்டி ஏந்தி காளியாட்டம் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர். திருநங்-கைகள் சுவாமி வேடமணிந்து வந்தபோது பக்தர்கள் அவர்-களை வணங்கி சென்றனர்.