/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளைஞர்களின் நலனுக்காக டைடல் பார்க் எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
/
இளைஞர்களின் நலனுக்காக டைடல் பார்க் எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
இளைஞர்களின் நலனுக்காக டைடல் பார்க் எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
இளைஞர்களின் நலனுக்காக டைடல் பார்க் எம்.பி., ராஜேஸ்குமார் பெருமிதம்
ADDED : நவ 06, 2025 01:57 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில், 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மினி டைடல் பார்க் அமைய உள்ளது. முன்னதாக, நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம், ராசிபுரம் மினி டைடல் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர், ராசிபுரத்தில் நடந்த விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
மூன்றாம் கட்ட நகரமாக உள்ள ராசிபுரத்திற்கு டைடல் பார்க் வேண்டும் என, அமைச்சர் மதிவேந்தனும், நானும் போராடி பெற்றுவந்துள்ளோம். நாமக்கல் கல்வி மாவட்டமாக உள்ளது. இங்குள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்ற நோக்கத்திற்காக டைடல் பார்க்கை, தமிழக முதல்வர் வழங்கினார். 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
இந்த டைடல் பார்க்கால், வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல், இந்த பகுதியே வளர்ச்சியடையும். திருவள்ளுவர் கலை கல்லுாரியில், கட்டமைப்பு வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல், ஆடிட்டோரியம் வேண்டும் எனவும் கல்லுாரி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மாணவரணி சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

