/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
. கிராவல் மண் கடத்திய டிப்பர், பொக்லைன் பறிமுதல்
/
. கிராவல் மண் கடத்திய டிப்பர், பொக்லைன் பறிமுதல்
ADDED : ஜன 26, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, கீரனுார் பகுதியில் வெண்ணந்துார் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்-போது, அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்-டனர். அதில் டிப்பர் லாரியில் சோதனையிட்டதில், அனுமதி-யின்றி கிராவல் மண் வெட்டி, விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வெண்ணந்துார் அடுத்த நெ.3.கொமராபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் டிரைவர் தினேஷ், 33, என்பவரை கைது செய்தனர். மேலும், டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.