/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2 கார்களில் ரூ.6.50 லட்சம் மதிப்பு புகையிலை கடத்தல்; ஒருவர் கைது
/
2 கார்களில் ரூ.6.50 லட்சம் மதிப்பு புகையிலை கடத்தல்; ஒருவர் கைது
2 கார்களில் ரூ.6.50 லட்சம் மதிப்பு புகையிலை கடத்தல்; ஒருவர் கைது
2 கார்களில் ரூ.6.50 லட்சம் மதிப்பு புகையிலை கடத்தல்; ஒருவர் கைது
ADDED : ஆக 14, 2025 02:48 AM
ஓசூர், ஓசூரில், 2 கார்களில் கடத்தி வந்த, 6.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், எஸ்.எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார், பேரண்டப்பள்ளி புதிய மேம்பாலம் அருகே, வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஸ்கோடா காரை நிறுத்தி கூறியபோது, டிரைவர், காரை நிறுத்தி விட்டு தப்பினார். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, 4.16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 344 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 1,600 ரூபாய் மதிப்புள்ள, 20 பாக்கெட் கர்நாடகா மதுபானங்கள் இருந்தன. அவற்றை காருடன் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., பாலமுருகன் மற்றும் போலீசார், ஜூஜூவாடி பகுதியில், நேற்றுமுன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த இன்னோவா காரில் பெங்களூருவில் இருந்து, திருநெல்வேலிக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. கார் டிரைவரான, திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, காரிலிருந்த, 2.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 270 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 1,760 ரூபாய் மதிப்புள்ள, 22 மதுபான பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.