/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை ஜோர்
/
நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை ஜோர்
நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை ஜோர்
நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை ஜோர்
ADDED : டிச 12, 2024 01:32 AM
நாமக்கல், டிச. 12-
கார்த்திகை தீபத்திருவிழா, நாளை கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல்லில் அகல் விளக்கு விற்பனை களைகட்டி உள்ளது.
நாளை (டிச., 13) கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட, ஒரு முகம், 2 முகம், 3 முகம், பஞ்சமுகம், அச்சு விளக்குகள், பாவை விளக்கு உள்ளிட்ட பல்வேறு விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மண் விளக்கு, அச்சு விளக்கு, மாடல் விளக்கு, சுவாமி விளக்கு, கலர் விளக்கு உள்பட, 40 வகையான விளக்குகள் விற்பனைக்கு தருவிக்கப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து, நாமக்கல், சந்தைப்பேட்டைபுதுாரை சேர்ந்த செல்லம்மாள் பூஜா ஸ்டோர் உரிமையாளர் பழனிசாமி கூறியதாவது:
ஆண்டுதோறும் தீபத்திருநாளில், வீடு, கோவில்களில் அகல் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுவது வழக்கம். அதன்படி, நாளை (டிச., 13) தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
இதற்காக, விருத்தாச்சலம், தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அகல் விளக்குகள் தருவிக்கப்பட்டுள்ளன. அதில் மண் விளக்கு, 1.50 ரூபாய், 5 ரூபாய், 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அச்சு விளக்குகள், 5, 7, 10, 15, 30, 50 ரூபாய்க்கும், மாடல் விளக்கு, 120 ரூபாய், 150 ரூபாய், சுவாமி விளக்குகள், 150, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, மண் விளக்குக்குத்தான் மவுசு அதிகம். வீடு, கோவில்களில், மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தான் தீபம் ஏற்ற வேண்டும்.
அதனால், அதிக அளவில் மண் விளக்கு வாங்கி செல்கின்றனர். தீபத்திருநாளுக்கான, ஒரு மாதத்திற்கு முன்பே, விளக்குகளை வாங்கி இருப்பு வைத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்த்திகை தீபத்திற்கு, 3 நாட்கள் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பதால், அகல் விளக்கு விற்பனை களைகட்டி உள்ளது.