ADDED : மே 08, 2025 01:30 AM
நாமக்கல்,
'நாளை, மண்டல அளவிலான பணியாளர் நாள் நிகழ்ச்சி நடக்கிறது. கூட்டுறவு நிறுவன மற்றும் ஓய்வு பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்' என, நாமக்கல் மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மண்டலத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைப்படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இரண்டாவது வெள்ளிக்கிழமை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும் வகையில், 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு
வருகிறது. அதன்படி, 6வது, 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி, நாளை (மே, 9), கலெக்டர் அலுவலகத்தில் காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
கூட்டுறவு நிறுவன பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்.
கூட்டுறவு துறையில் பணி
புரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும், தங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால், 'பணியாளர் நாள்' கூட்டத்தை பயன்படுத்தி பயன்
பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.