/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் உற்சாகம்
/
கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : நவ 03, 2025 03:29 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகி-றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.
தற்போது மழை சீசனால், கொல்லிமலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, கொல்லிமலை முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி, சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்தனர்.தொடர் மழை பெய்ததால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்-ளதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை. இதனால், மாசிலா அருவி, நம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாமடைந்தனர்.

