ADDED : நவ 03, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சடையம்பாளையம் வாய்க்கால் கரையில், குண்டாங்கல்  காடு மேட்டுவளவு செல்லும் தார்ச்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பல்லாங்குழி போல் உள்ளது.
மேலும், சாலையின் இருபுறமும் முள் செடிகள் வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் அதிகளவில் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயணிக்கின்றனர்.  சாலை சேதமாகி இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

