ADDED : நவ 03, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்,: குமாரபாளையம் அருகே, கலியனுார் பகுதியை சேர்ந்தவர் மணி-மேகலை, 57; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, 12:50 மணிக்கு, சேலம்-கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு பகு-தியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். திடீரென பஸ்சை நிறுத்தியதால், பின்னால் வந்த லாரி, பஸ்சின் பின் பகு-தியில் மோதியது.
இதில் லாரியின் முன்பகுதி சேதமானது. படுகாயமடைந்த மணி-மேகலை, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அரசு பஸ் டிரைவரான, நீலகிரி மாவட்டம், முதுகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார், 47, என்பவரை கைது செய்தனர்.

