/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கொல்லிமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : டிச 29, 2025 07:15 AM
சேந்தமங்கலம்: தமிழகத்தின் சுற்றுலா தலமாக, கொல்லிமலை விளங்குகிறது. இங்கு குடும்பத்தினருடன் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சீக்குப்பாறை முனையம் போன்றவை முக்கிய இடமாக விளங்குகிறது.
இதுதவிர, அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி போன்ற முக்கிய ஆன்மிக தலங்களும் உள்ளன.அதை தவிர, சோளக்காடு பகுதியில் உள்ள பழங்-குடியினர் சந்தையில், பலாப்பழம், அன்னாசி, மலை வாழை போன்ற பழ வகைகள் கிடைக்கும். கொல்லிமலை வந்து செல்லும் அனைத்து சுற்-றுலா பயணிகளும், இந்த பழங்குடியினர் சந்-தைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பழ வகைகளை வாங்கி செல்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், கொல்லிமலையில் பெய்த தொடர் மழையால், அனைத்து அருவிக-ளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தற்போது மழை பெய்யாததால், கடும் குளிர் நிலவி வருகிறது. வார விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறை என்பதால், நேற்று, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிக-ளவில் வந்தனர். அவர்கள் சிறிதளவே கொட்டிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

