/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு 14 கடைகளுக்கு டவுன் பஞ்., நிர்வாகம் நோட்டீஸ்
/
ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு 14 கடைகளுக்கு டவுன் பஞ்., நிர்வாகம் நோட்டீஸ்
ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு 14 கடைகளுக்கு டவுன் பஞ்., நிர்வாகம் நோட்டீஸ்
ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஆக்கிரமிப்பு 14 கடைகளுக்கு டவுன் பஞ்., நிர்வாகம் நோட்டீஸ்
ADDED : அக் 08, 2025 01:20 AM
ப.வேலுார், ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே கடை நடத்தி வரும், 14 பேருக்கு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி, டவுன் பஞ்., நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து, நாமக்கல், மோகனுார், தொட்டியம், முசிறி, சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து பாதிப்பு குறித்து, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம், சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தது. அப்போது, பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று, வெளியே வரும்போது ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தெரிந்தது. இதையடுத்து, பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தற்போது மீண்டும், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பொதுமக்கள் செல்லும் பாதை படிக்கட்டுகளை முழுவதுமாக ஆக்கிரமித்து பழக்கடை, ஓட்டல், டீக்கடை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பஸ் வெளியே வரும்போது திரும்ப முடியாமல் டிரைவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். சில மாதங்களுக்கு முன், போக்குவரத்து நெரிசலால், இரண்டு பஸ்களுக்கு இடையே சிக்கி உயிர் பலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, 14 கடைகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ் வழங்கினார். அதில், ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே வணிக வளாக கடைகளின் முன் பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. அதனால், வணிக கடை உரிமையாளர்கள் மற்றும் தங்களது சொத்து ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளுக்குள் வணிக நிறுவனங்களை நடத்திக்கொள்ள வேண்டும். மேலும், பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து கடை உரிமையாளர்களும், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.