/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'
/
'நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'
'நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'
'நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'
ADDED : அக் 08, 2025 01:20 AM
நாமக்கல், ''கல்வி மட்டுமல்லாது, நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற்போல், நமது திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.
நாமக்கல், காவேட்டிப்பட்டியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2025-26-ம் கல்வியாண்டிற்கான, மாவட்ட அளவிலான மன்ற போட்டிகளான, இலக்கிய மன்றம், வினாடி-வினா, சிறார் திரைப்பட போட்டி நடந்தது. நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
2025-26-ம் கல்வியாண்டில், வட்டார அளவில் இலக்கிய மன்றம், வினாடி-வினா, சிறார் திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற, 6 முதல், 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள், இன்று (நேற்று) தொடங்கி, நாளை (அக்., 9) வரை நடக்கிறது.
பேச்சு, கட்டுரை, கவிதை, கதை உள்ளிட்ட இலக்கிய மன்ற போட்டிகளில், 360 மாணவர்கள், 72 நடுவர்கள், 15 பொறுப்பாசிரியர்கள், கதை, வசனம், நடிப்பு, ஒலிப்பதிவு ஆகிய சிறார் திரைப்பட மன்ற போட்டிகளில், 180 மாணவர்கள், 27 நடுவர்கள், 15 பொறுப்பாசிரியர்கள், வினாடி-வினா மன்ற போட்டிகளில், 135 மாணவர்கள், 9 நடுவர்கள் மற்றும் 15 பொறுப்பாசிரியர்கள் என மொத்தம், 675 மாணவர்கள், 108 நடுவர்கள், 45 பொறுப்பாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், 2023--25-ம் ஆண்டுகளில், 7 மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு, மாநில அளவில் வெற்றி பெற்று, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு, கல்வி சுற்றுலா பயணம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு சிறப்பான திட்டம். கல்வி மட்டுமல்லாது, நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற்போல், நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு மூலம், இதுபோன்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதிகளவிலான விழிப்புணர்வு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.