/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வியாபாரிகள் சிண்டிகேட் அமைப்பு: மரவள்ளி விவசாயிகள் குமுறல்
/
வியாபாரிகள் சிண்டிகேட் அமைப்பு: மரவள்ளி விவசாயிகள் குமுறல்
வியாபாரிகள் சிண்டிகேட் அமைப்பு: மரவள்ளி விவசாயிகள் குமுறல்
வியாபாரிகள் சிண்டிகேட் அமைப்பு: மரவள்ளி விவசாயிகள் குமுறல்
ADDED : நவ 25, 2024 03:18 AM
ப.வேலுார்: வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு மரவள்ளிக்கி-ழங்கை அறுவடை செய்ய மறுப்பதால், விவசாயிகள் பாதிப்புக்-குள்ளாகி உள்ளனர். இதனால் அதன் விலை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய-கரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்-சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்கு-றிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்-டுள்ளது. இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மல-வேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகி-றது. கடந்த வாரம், ஜவ்வரிசி ஆலைக்கு செல்லும் மரவள்ளி கிழங்கு டன், 7,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, டன் ஒன்-றுக்கு, 1,250 ரூபாய் வரை குறைந்து, 6,250 ரூபாய்க்கு விற்கி-றது. மரவள்ளிக்கிழங்கு விலை சரிவால் சாகுபடி செய்துள்ள விவ-சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, மரவள்ளி விவசாயிகள் கூறியதாவது:
பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில், 3,000 ஏக்கரில் மர-வள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளோம். நேற்று, ஜவ்வரிசி ஆலைக்கு மரவள்ளி கிழங்கை கொண்டு செல்ல வந்த வியாபா-ரிகள், டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை குறைத்து கேட்டதால் அதிர்ச்சியடைந்தோம்.
இதேபோல் மற்ற கிழங்கு வியாபாரிகளும் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கேட்டதால் பெரும்பாலான தோட்டத்தில், நேற்று மரவள்ளி கிழங்கு அறுவடை நடைபெற-வில்லை. அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள கிழங்கு விவசாயிகள் மட்டுமே டன் ஒன்றுக்கு, 6,250 ரூபாய்க்கு விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மர-வள்ளிக்கிழங்கு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. விவசா-யிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.