/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் - பரமத்தி சாலையில் நெரிசல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம்
/
நாமக்கல் - பரமத்தி சாலையில் நெரிசல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம்
நாமக்கல் - பரமத்தி சாலையில் நெரிசல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம்
நாமக்கல் - பரமத்தி சாலையில் நெரிசல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 14, 2024 10:55 AM
நாமக்கல்: நெரிசலை தவிர்க்க, கோட்டை சாலையில், 'பேரிகார்டு' அமைத்து சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்ய, நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் - பரமத்தி சாலையில், கரூர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோட்டை சாலை வரை, சாலையின் நடுவில், 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சந்தைப்பேட்டைபுதுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து, காவேட்டிப்பட்டி வரையும், 'சென்டர் மீடியன்' அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோட்டை சாலை பகுதியில், வாகனங்கள் விதிமுறை மீறி தாறுமாறாக சென்று திரும்புவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நெடுஞ்
சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருக்குணா தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர், கோட்டை சாலையில், போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோட்டை சாலையில், ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், சந்தைபேட்டைபுதுார் பஸ் ஸ்டாப் முன்பு வரை, சாலை நடுவே, 'சென்டர் மீடியன்' அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
'சோதனை முயற்சியாக இந்த போக்குவரத்து மாற்றம், 15 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும். அவை சரியாக இருந்தால், தொடர்ந்து செயல்படும். இல்லை என்றால், சிக்னல் அமைத்து ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உதவி பொறியாளர் கைலாசம், சாலை பாதுகாப்பு அலகு உதவி பொறியாளர் சிவக்குமார், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.

