/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் 'டிராபிக்'
/
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் 'டிராபிக்'
ADDED : அக் 04, 2025 01:22 AM
அரவக்குறிச்சி அரவக்குறிச்சியில் கால்நடை வளர்க்கும் தொழில் பிரதானமாக உள்ளது. இதனால் ஆடு, மாடு வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். அவை, கூட்டமாக வீதிகளில் உள்ள புற்கள், குப்பைகளை சாப்பிடுகின்றனர். சில நேரங்களில் திடீரென சாலையின் நடுப்பகுதிக்கு வந்து விடுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது, ஆடுகள் திடீரென குறுக்கே ஓடுவதால் நிலை தடுமாறி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. பெருமளவு மக்கள் நடமாட்டம் காணப்படும் சந்தைகள், பேருந்து நிலையம், பள்ளிகள் மற்றும் முக்கிய வீதிகளில் ஆடுகள் குழுக்களாக நின்று அனைவருக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.