/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உழவர் பயிற்சி நிலையம் சார்பில் கிராம அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்

ADDED : செப் 25, 2024 07:10 AM
நாமக்கல்: உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராம அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம், நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந் தது. நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்து, வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், பட்டுவளர்ச்சி மற்றும் வனத்துறை போன்ற துறைகளில், அரசின் திட்டங்கள், மானியங்கள், தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பாலாஜி, கால்நடை உதவி மருத்துவர் நித்யா, வனவர் ரமேஷ், மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் தரண்யா, பட்டுவளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, உதவி தோட்டக்கலை அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் தங்களது துறையின் திட்டங்கள், வழங்கப்படும் மானியங்கள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சுதாகர், தொழில் நுட்ப மேலாளர் ஹரிஹரன் ஆகியோர், உயிர் உர விதை நேர்த்தி மற்றும் டிரைகோடெர்மா விரிடி விதை நேர்த்தி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் ரமேஷ், கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.