/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்சகாவ்யா தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
/
பஞ்சகாவ்யா தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஏப் 19, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட, அகரம் கிராமத்தில், நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிராமப்புற அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சகாவ்யா என்பது, பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தின் கலவையே ஆகும்.
தசகாவ்யா என்றால் ஆடாதொடை, நொச்சி, வேம்பு, ஊமத்தை, புங்கம் ஆகியவற்றின், ஐந்து இலை கரைசல்களை எடுத்து பஞ்சகாவ்யா உடன் கலந்து செய்யும் கலவையே தசகாவ்யா. பஞ்சகாவ்யா மற்றும் தசகாவ்யா இயற்கை வழி விதை நேர்த்தி, பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், விவசாயிகள், மாணவர்களிடம் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

