/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வானவில் மன்ற ஒன்றிய கருத்தாளர்களுக்கு பயிற்சி
/
வானவில் மன்ற ஒன்றிய கருத்தாளர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 10, 2025 01:13 AM
நாமக்கல், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார வளமைய அலுவலகத்தில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில தலைவர் திருநாவுக்கரசு, கல்வியின் அவசியம், அறிவியல் மனப்பான்மை குறித்து பேசினார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், வானவில் மன்ற கருத்தாளர்களின் அடிப்படை பணி, அறிவியல் கருத்துக்களை மாணவர்களிடம் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்து, ஒன்றிய கருத்தாளர்களுக்கு பயிற்சியளித்தார். இதில், நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார்.