/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் குதித்த இன்ஸ்.,க்கு சிகிச்சை
/
கிணற்றில் குதித்த இன்ஸ்.,க்கு சிகிச்சை
ADDED : மே 08, 2025 01:58 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் இன்ஸ்பெக்டர் சுகவனம்; இவர், இரண்டு ஆண்டாக பணிபுரிந்து வருகிறார். ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பணியில் இருந்த அவர், ரோந்து பணிக்காக ஜீப்பில், வெண்ணந்துார் அடுத்த அக்கரைப்பட்டி பகுதிக்கு சென்றார். அங்கு, செல்வராஜ் என்பவரது தோட்டம் அருகே ஜீப்பை நிறுத்திவிட்டு, சாலையிலிருந்து நுாறு அடி துாரமுள்ள கிணற்றுக்கு சென்று குதித்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அங்கு ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்வர்கள், கிணற்றில் தத்தளித்த இன்ஸ்பெக்டர் சுகவனத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பணிச்சுமை காரணமாக கிணற்றில் குதித்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என, உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

