நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தளிர்விடும் பாரதம் சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்-தது.
அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் தலைவர் ஞானேஸ்வரன் தலைமை வகித்தார். தளிர்விடும் பாரதம் தலைவர் சீனிவாசன், மரக்கன்றுகளை வழங்கினார். தளிர்விடும் பாரதம் செயலாளர் பிரபு பேசுகையில், ''ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு, அதற்கு அவர்களின் பெயர்களை சூட்டி, தினமும் தண்ணீர் ஊற்றி, நம் வீட்டில் ஒருவரை போல கருதி மரக்கன்றுகளை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். இளைஞர்கள், இயற்கை சார்ந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக பல புத்-தகங்களை படித்து தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.