ADDED : அக் 24, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா பள்ளிபாளையம் வட்டாரம், பல்லக்காபாளையம் ஊராட்சி சார்பில் துவக்கப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தனி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் நாச்சிமுத்து, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

