/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வன உரிமை சட்டப்படி குடியிருப்புக்கு பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு
/
வன உரிமை சட்டப்படி குடியிருப்புக்கு பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு
வன உரிமை சட்டப்படி குடியிருப்புக்கு பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு
வன உரிமை சட்டப்படி குடியிருப்புக்கு பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு
ADDED : டிச 09, 2025 05:13 AM

நாமக்கல்: வன உரிமை சட்டப்படி, குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் வந்த பழங்குடியின மக்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூலக்குறிச்சி ஊராட்சியில், பெரிய குறிச்சி அருகே இருக்கக்கூடிய பாரதி நகர் குக் கிராமத்தில், 80 ஆண்டுகளுக்கு மேலாக, 20க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர், வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என, அனைவரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில், 2006 வன உரிமை சட்டப்படி, வன உரிமை குழு தேர்ந்தெடுத்து முறைப்படி குடிமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.எங்கள் குடியிருப்பு பகுதியில், தமிழகரசு கான்கிரீட் சாலை, தெரு விளக்கு, குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளது. ஏழை பழங்குடியின மக்களாகிய எங்களுக்கு, குடிமனை பட்டா கிடைக்க, 2006 வன உரிமை சட்டப்படி, பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

