/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம்
/
நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம்
நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம்
நாமக்கல் மனவளக்கலை மன்றத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டம்
ADDED : செப் 07, 2025 12:43 AM
நாமக்கல், நாமக்கல்- அறிவுத் திருக்கோவில் மனவளக்கலை மன்றத்தில், ஞான ஆசிரியர் தினவிழா, திருக்குறள் உரை போட்டி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு அளிப்பு விழா என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
-நாமக்கல் அறிவுத் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், கல்வியாளருமான உதயகுமார் தலைமை வகித்தார். ஆழியார் சேலம் மண்டல தலைவர் தங்கவேல், திருக்குறள் உரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
அப்போது அவர், ''மதம் கடந்து சொல்லும் மகா மந்திரம் வாழ்க வளமுடன். யோகா பள்ளிகளில் கட்டாய பாடமாக இருக்கிறது. கற்றல், கடைப்பிடி, கற்பிக்க வேண்டும் என்ற வேதாத்திரி மகரிஷி வாக்கியத்தை உணர வேண்டும். மனிதனை மனிதனாக உணர்த்த கூடியது யோகா,'' என்றார்.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பனிமலர், 'நட்பு' என்ற தலைப்பிலும், நம்மாழ்வார் பள்ளி மாணவி லத்திகாஸ்ரீ, 'திருக்குறளில் கல்வி' என்ற தலைப்பிலும் பேசினர்.
தொடர்ந்து, நாமக்கல் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த, 185 பேராசிரியர்களுக்கு கேடயம், சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. மன்ற பொருளாளர் நாகராஜன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.