/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு காவலர் தின விழிப்புணர்வு கண்காட்சி
/
தமிழ்நாடு காவலர் தின விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : செப் 07, 2025 12:43 AM
நாமக்கல், கடந்த, 1859ல், மெட்ராஸ் மாவட்ட காவலர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் நினைவாக, செப்., 6ல், தமிழ்நாடு காவலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில், சாலை பாதுகாப்பு, சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
நாமக்கல் எஸ்.பி., விமலா, கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், சாலை பாதுகாப்பு, சைபர் குற்றம் ஏற்பட்டால் எவ்வாறு தொடர்பு கொள்வது, போலீசார் பயன்படுத்திய சீருடைகள், வாகனத்தின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
மேலும், போலீசார் பயன்படுத்திய பழைய துப்பாக்கி முதல் நவீன துப்பாக்கிகள், பாதுகாப்பு உடை, புல்லட் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை பார்க்க வந்த பொதுமக்களுக்கு, ஒவ்வொரு துப்பாக்கியின் செயல்பாடுகள், குற்றச்சம்பவங்கள் நடந்தால் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது குறித்து விளக்கமளித்தனர்.
கூடுதல் எஸ்.பி., விஜயராகவன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர்.