/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி
/
அரசு பள்ளியில் திருக்குறள் பயிற்சி
ADDED : செப் 07, 2025 12:44 AM
ராசிபுரம், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி, ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று தொடங்கியது. தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். ராசிபுரம் நகராட்சி சேர்மன் கவிதா, திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் பெரியசாமி, திருக்குறளை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறித்தும்; திருக்குறளின் உலக பொதுமறை தத்துவத்தை வலியுறுத்தியும், திருக்குறளை, கதைகள், நாடகங்கள், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, கதை சொல்லுதல் மூலமாக எப்படி கொண்டு செல்வது என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
கருத்தாளர் தட்சிணாமூர்த்தி, கவிதா பெரியசாமி, பட்டதாரி ஆசிரியர் மனோஜ் குமார் ஆகியோர் குழந்தைகளுக்கு இனியவை கூறல், செய்நன்றி அறிதல் என்ற, இரண்டு அதிகாரங்களில் இருந்து பயிற்சியளித்தனர். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரி தமிழ் துறை முன்னாள் மாணவர் சங்க தலைவர் முனியப்பன் முன்னிலையில் பயிற்சி நடந்தது.