/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரியில் மண் எடுத்த லாரி, பொக்லைன் சிறைபிடிப்பு
/
ஏரியில் மண் எடுத்த லாரி, பொக்லைன் சிறைபிடிப்பு
ADDED : ஆக 17, 2025 02:17 AM
திருச்செங்கோடு, நாராயணபாளையம் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் மண் எடுத்து சென்ற டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரத்தை, பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருச்செங்கோடு அடுத்துள்ள நாராயணபாளையத்தில், 43 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து, சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி எஸ்.ஹெச்.86, மாநில நெடுஞ்சாலை பணிக்கு, தினமும் ஒரு லோடு வீதம், காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, 75 மீட்டர் நீளம், 75 மீட்டர் அகலம், 0.9 மீட்டர் ஆழத்தில், 5,000 கியூபிக் மீட்டர் அல்லது 10,000 மெட்ரிக் டன் மண் அள்ளிக்கொள்ள, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், மண் அள்ளுவதாக கிராம மக்களிடம் கூறிய நிறுவனத்தினர் ஒப்பந்த அளவை மீறி, ஏழு அடி உயரத்திற்கு மண் எடுத்துள்ளனர். ஒரு பர்மிட் வைத்துக்கொண்டு, 10 டிப்பர் லாரிகளில் மண் எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், டிப்பர் லாரி, இரண்டு பொக்லைன் இயந்திரங்களை சிறை பிடித்தனர்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை சிவில் இன்ஜினியர் மணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கூறுகையில், 'சாலை விரிவாக்க பணிக்கு மண் எடுக்க, 75 மீட்டர் நீளம், 75 மீட்டர் அகலம், 3 அடி உயரம் மட்டுமே மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், ஒப்பந்த அளவை மீறி, 7 அடி உயரத்திற்கு மண் எடுத்துள்ளனர். அதிகாரி
கள் உடனடியாக வந்து அளவு செய்து மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்' என்றனர்.