ADDED : டிச 11, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேலம், வாழப்பாடியை சேர்ந்தவர் சடையன், 42; லாரி டிரைவர். நேற்று முன்தினம் காலை, சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பகுதியில் இறக்கிவிட்டு, வாழப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இரவு, 9:00 மணியளவில், சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் புறவழிச்சாலையில் உள்ள பொம்மசமுத்திரம் ஏரி பாலத்தை கடந்துசென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற வாக-னத்தை முந்த முயன்றுள்ளார்.
அப்போது, எதிர் திசையில் திடீரென டூவீலர் ஒன்று வந்ததால், மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் இருந்த, 5 அடி பள்-ளத்தில் பாய்ந்தது. லாரி டிரைவர் சடையன், காயமின்றி உயிர் தப்பினார். பின், நேற்று காலை, 9:00 மணிக்கு, 'கிரேன்' உதவியுடன் பள்ளத்தில் இறங்கிய லாரி மீட்கப்பட்டது.

