/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெரிய ஏரியின் உபரிநீர் செல்ல வசதியாக நீர்வழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்
/
பெரிய ஏரியின் உபரிநீர் செல்ல வசதியாக நீர்வழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்
பெரிய ஏரியின் உபரிநீர் செல்ல வசதியாக நீர்வழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்
பெரிய ஏரியின் உபரிநீர் செல்ல வசதியாக நீர்வழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 11, 2025 06:52 AM

எருமப்பட்டி: பழையபாளையம் பெரிய ஏரியின் உபரிநீர் செல்லும் வாய்க்கால், பாலத்திற்கு அடியில் மேடான இடத்தில் இருப்பதால் தண்ணீர் செல்-வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எருமப்பட்டி யூனியன், பழையபாளையத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை, சின்ன ஏரி, பெரிய ஏரி என, இரண்-டாக பிரிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் கன மழை பெய்யும்போது, அங்கிருந்து வரும் மழைநீர் காற்றாற்று வெள்ளமாக மாறி, இந்த ஏரிக்கு செல்லும் வகையில் நீர் வழிப்பாதை உள்-ளது.
இந்நிலையில், கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையில் பெய்த கனமழையால், இந்த ஏரி நிரம்பி, பழையபாளையம் வழியாக செல்லும் வாய்க்காலில், துாசூர் ஏரிக்கு சென்றது. இதேபோல், பெரிய ஏரியில் இருந்து முத்துக்காப்-பட்டி அருகே உள்ள கருவாட்டாற்றிற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த பெரிய வாய்க்காலில் இருந்து தண்ணீர் வழிந்தால், எரு-மப்பட்டி-சேந்தமங்கலம் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிர-மத்துக்குள்ளாவர். மேலும், அங்குள்ள, 100 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்துவிடும்.
இதை தடுக்கும் வகையில், எருமப்பட்டி-சேந்த-மங்கலம் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவில், கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. ஆனால், இந்த பாலம் கட்டப்பட்ட இடம் மேடாகவும், தண்ணீர் செல்லும் மற்றொரு பாதை தாழ்வாகவும் உள்ளதால், ஏரி தண்ணீர் பாலத்திற்கு அடியில் செல்லாமல், தாழ்வான பகுதியில் சென்று மீண்டும் தார்ச்சாலையில் பாய்ந்து செல்கிறது. இதனால், ஏராளமான விவ-சாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பாலம் கட்டப்பட்ட இடத்தில், தண்ணீர் செல்லும் வகையில் நீர்வழிப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

