ADDED : ஜூன் 01, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது.
கடந்த வாரம் நடந்த மஞ்சள் ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால், 12,644 ரூபாய் முதல், 15,159 ரூபாய்; கிழங்கு மஞ்சள், 11,508 ரூபாய் முதல், 13,229 ரூபாய்; பனங்காலி மஞ்சள், 21,195 ரூபாய் முதல், 29,023 ரூபாய் என, 1,920 மூட்டை மஞ்சள், ஒரு கோடியே, 52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால், 10,839 ரூபாய் முதல், 14,598 ரூபாய்; கிழங்கு மஞ்சள், 8,111 ரூபாய் முதல், 13,339 ரூபாய்; பனங்காலி மஞ்சள், 13,600 ரூபாய் முதல், 29,899 ரூபாய் என, 1,335 மூட்டை மஞ்சள், ஒரு கோடியே, 7,000 ரூபாய்க்கு விற்பனையானது.