/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி சக்கரத்தில் சிக்கி இருவர் சாவு
/
லாரி சக்கரத்தில் சிக்கி இருவர் சாவு
ADDED : ஆக 10, 2025 01:35 AM
நாமக்கல்:லாரி சக்கரத்தில் சிக்கி இரு மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி கிழக்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் யோகேஷ், 20; கோழித்தீவன ஆலையில் பணிபுரிந்தார். இவரது நண்பர், நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, பழனியாண்டி தெருவை சேர்ந்த பரத், 17; தனியார் கல்லுாரி பி.காம்., முதலாமாண்டு மாணவர்.
நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, இருவரும் 'யமஹா ஆர்15' பைக்கில் நாமக்கல், முதலைப்பட்டியில் உள்ள டீக்கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, கருங்கல்பாளையம் அருகே முன்னால் சென்ற லாரியை, யோகேஷ் முந்திச்செல்ல முயன்றபோது, லாரியின் பின்புறம் டூ - வீலர் மோதியது. இதில், லாரி பின்புற சக்கரத்தில் சிக்கி, இருவரும் உயிரிழந்தனர்.