/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெவ்வேறு இடத்தில் 2 பேர் விஷம் குடித்து விபரீத முடிவு
/
வெவ்வேறு இடத்தில் 2 பேர் விஷம் குடித்து விபரீத முடிவு
வெவ்வேறு இடத்தில் 2 பேர் விஷம் குடித்து விபரீத முடிவு
வெவ்வேறு இடத்தில் 2 பேர் விஷம் குடித்து விபரீத முடிவு
ADDED : டிச 01, 2025 02:44 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த வீசாணம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்-தவர் மணிகண்டன், 41; கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி, 37; தம்பதியருக்கு, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த, 23ல், கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த செல்வி, வீட்டில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவம-னையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, நேற்று மாலை, 5:00 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.* நாமக்கல், செல்லாண்டி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்-தவர் சகுந்தலா மகன் யுவராஜ், 29; இவர், கடந்த, 5 ஆண்டுக-ளாக லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், காரில் வந்தவர், காலை, 9:00 மணிக்கு, மொபைல் போனில், தாயாரை அழைத்த, வீட்டிற்கு வெளியே காரில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த யுவராஜ், தாயார் சகுந்தலாவிடம், தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் உயிரி-ழந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

