/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எப்.சி., கட்டணம் பலமடங்கு உயர்வு ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு மனு
/
எப்.சி., கட்டணம் பலமடங்கு உயர்வு ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு மனு
எப்.சி., கட்டணம் பலமடங்கு உயர்வு ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு மனு
எப்.சி., கட்டணம் பலமடங்கு உயர்வு ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு மனு
ADDED : டிச 01, 2025 02:43 AM
நாமக்கல்: 'மத்திய அரசு உயர்த்தியுள்ள, எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக மோட்டார் டிரான்ஸ்போர்ட் பெடரேஷன் மாநில தலைவர் செல்ல ராசாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், டூவீலர் முதல் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரை அனைத்திற்கும், தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல்(எப்.சி.,) கட்டணத்தை, கடந்த, 11 முதல், பல மடங்கு உயர்த்தி, அனைத்து மாநிலங்களுக்கும் வழி-காட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
புதிய உத்தரவுப்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள டூவீலர்க-ளுக்கு எப்.சி., சான்றிதழ் பெற, தற்போதுள்ள, 600 ரூபாய் கட்ட-ணத்தை, 1,000 ரூபாயாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள டூவீலர்களுக்கு, 600 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தி-யுள்ளது. மேலும், 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள, 3 சக்கர வாக-னங்களுக்கு எப்.சி., பெற தற்போது, 600 ரூபாய் உள்ளதை, 15 முதல், 20 ஆண்டு வரை, 3,000 ரூபாய் உயர்த்தியும், 20 ஆண்டுக-ளுக்கு மேல் உள்ள, 3 சக்கர வாகனங்களுக்கு, 7,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
நடுத்தர சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாக-னங்கள்(வேன்கள்) தற்போதைய எப்.சி., கட்டணம், 1,800 ரூபாயை, 15 - -20 ஆண்டுகள் வரை, 10,000 ரூபாய், 20 ஆண்டு-களுக்கு மேல், 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கார் உள்-ளிட்ட எல்.சி.வி., வாகனங்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு மேல், 1,000ல் இருந்து, 5,000 ரூபாய், 20 ஆண்டுகளுக்கு மேல், 15,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதேபோல், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி, பஸ் மற்றும் அனைத்து கனரக வாக-னங்களுக்கும், 2,500ல் இருந்து, 15--20 ஆண்டுகள் வரை, 12,500 ரூபாய், 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்க-ளுக்கு, 25,000 ரூபாய் என, 10 மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்த எப்.சி., கட்டண உயர்வால், லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள், குறிப்பாக ஓரிரண்டு பழைய லாரிகளை வைத்து தொழில் செய்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கும், பல லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்ப-டுவர். 2020-ல் கொரோனா பரவலுக்கு பின், லாரி தொழில் கடும் நெருக்கடியில் சிக்கி நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள, எப்.சி., கட்டண உயர்வை, கடந்த, 17 முதல், தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
அழிந்து வரும் போக்குவரத்து தொழிலை பாதுகாக்கவும், லட்-சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கோடிக்கணக்-கான டூவீலர், எல்.சி.வி., வேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையா-ளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு அறிவித்துள்ள எப்.சி., சான்றிதழ் கட்டண உயர்வை, தமிழகத்தில் அமல்படுத்தாமல், மத்திய அரசிடம் பேசி, புதிய எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

