/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழக சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது பரமத்தி அருகே கோர விபத்து; 2 பேர் பலி
/
தமிழக சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது பரமத்தி அருகே கோர விபத்து; 2 பேர் பலி
தமிழக சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது பரமத்தி அருகே கோர விபத்து; 2 பேர் பலி
தமிழக சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது பரமத்தி அருகே கோர விபத்து; 2 பேர் பலி
ADDED : ஜூன் 09, 2025 03:31 AM
ப.வேலுார்: பரமத்தி அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், பெண் உள்பட இரண்டு பேர் பலியாகினர்.
மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த எட்டு பேர், தமிழகத்திற்கு 'பொலிரோ' ஜீப்பில் சுற்றுலா வந்தனர். நான்கு ஆண், இரண்டு பெண், இரண்டு குழந்தைகள் வந்தனர். சுற்றுலா முடிந்து நேற்று மதியம், சொந்த ஊருக்கு திரும்பினர். மதுரையில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வழியாக குஜராத் நோக்கி சென்றனர். பரமத்தி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் வந்தபோது, நாமக்கல்--கரூர் தேசிய நெடுஞ்சாலையோரம், மதியம், 3:00 மணிக்கு ஜீப்பை நிறுத்தி அனைவரும் சாப்பிட்டனர். சிலர் ஜீப்பிலும், சிலர் சாலையிலும் அமர்ந்திருந்தனர்.அப்போது கொச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஜீப்பின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இதில் அருகே இருந்த பள்ளத்தில் ஜீப் துாக்கி வீசப்பட்டது. ஜீப் மீது கன்டெய்னர் லாரியும் உருண்டு விழுந்தது. இதில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரிஷப், 35, ரூபாலி ஜல்காவு, 35, சம்பவ இடத்தில் பலியாகினர். ஜீப்புக்குள் இருந்த மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
ஒரு பெரியவர், இரு குழந்தைகள் லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்த மூவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் நிதிஷை, 33, போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தால், நாமக்கல்--கரூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.