/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
9 ஆமைகளை கொன்ற இருவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மருந்துக்காக பரமத்தி வேலுாரில் தொடரும் வேட்டை

ADDED : ஆக 18, 2025 03:46 AM
ப.வேலுார்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அஜித், 26, குமார், 25; நாமக்கல் மாவட்டம் ப.வேலுாரில் ஒரு தேங்காய் குடோனில் வேலை செய்கின்றனர். இவர்கள் கடந்த, 8ல், ப.வேலுார் அருகே, அனிச்சம்
பாளையம் காவிரி கரையோரத்தில் ஒன்பது ஆமைகளை பிடித்-துள்ளனர். தொடர்ந்து வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ஆமைகளை உயிருடன் எரித்துள்ளனர். இதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மொபைல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை-தளங்களில் பரப்பி உள்ளார். இதைப்பார்த்த நாமக்கல் மாவட்ட வனத்துறையினர், இருவரையும் பிடித்தனர். இறந்த ஒன்பது ஆமைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மருத்துவ குணங்களுக்காக ஆமையை பிடித்து, எரித்து கொன்றது தெரியவந்-தது. இருவரையும் கைது செய்த வனத்துறையினர், தலா, 50,000 ரூபாய் வீதம் என ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஆமைக்கறிக்கு மவுசு
ப.வேலுார் காவிரியாற்றில் அரிய வகை ஆமைகளான வெள்ளை பாறை, பி.ஸ்டார் ரகம் உள்ளது. கை, கால் மூட்டுவலி, மூல நோய் குணமாக ஆமைக்கறியை பயன்படுத்துகின்றனர். கிலோ, 300 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை விற்கின்றனர். இதற்காக ஆமைக்கறிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த ரக ஆமைகள் கிடைக்கும், காவிரி கரையோர பகுதிகளான பொத்-தனுார், நன்செய் இடையாறு, அனிச்சம்
பாளையம், ப.வேலுார் பகுதிகளில் ஆமை வேட்டை தொடர்ந்து நடக்கிறது என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.