நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார், செட்டியார் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் நாகராஜன், 39; பால் வியாபாரி. கடந்த, 17ல் பரமத்தி அருகே, பஞ்சப்பாளையம் பிரிவு ரோட்டில் தன், டி.வி.எஸ்., இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு,
அருகில் இருந்த நண்பரின் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.