/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண் மீது தாக்குதல் இரு பெண்கள் கைது
/
பெண் மீது தாக்குதல் இரு பெண்கள் கைது
ADDED : செப் 20, 2024 01:45 AM
பெண் மீது தாக்குதல்
இரு பெண்கள் கைது
நாமகிரிப்பேட்டை, செப். 20-
நாமகிரிப்பேட்டை அருகே, பெண்ணை தாக்கிய வழக்கில், இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஒன்பதாம்பாலிக்காட்டை சேர்ந்தவர் வருதராஜ் மனைவி சுலோச்சனா, 39. இவரது மகன் சதீஷ்குமார், 21, நாகியம்பட்டியை சேர்ந்த லட்சுமியை, 21, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சதீஷ்குமார், லட்சுமி இருவரும் பனமரத்துப்பட்டியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் லட்சுமியின் உறவினர்களான தனலட்சுமி, மாதேஸ்வரன், லதா மற்றும் பெயர் தெரியாத மற்றொருவர் என நான்கு பேர் சுலோச்சனா வீட்டிற்கு கடந்த, 12ம் தேதி சென்று லட்சுமி குறித்து விசாரித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சுலோச்சனாவை தனம் உள்ளிட்ட நான்கு பேரும் தாக்கியுள்ளனர். காயடைந்த சுலோச்சனா ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, 17ம் தேதி வந்த புகார்படி, ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சுலோச்சனாவை தாக்கிய நான்கு பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டம், நாகியம்பட்டி புது குட்டை வழியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி லதா, 45, ஒன்பதாம் பாலிக்காடு மாதேஸ்வரன் மனைவி தனலட்சுமி, 41, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.