/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உதயநிதி பிறந்தநாள் ரத்த தான முகாம்
/
உதயநிதி பிறந்தநாள் ரத்த தான முகாம்
ADDED : டிச 25, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உதயநிதி பிறந்தநாள்
ரத்த தான முகாம்
திருச்செங்கோடு, டிச. 25-
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த
நாளையொட்டி, திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க., சார்பில், நேற்று கோழிக்கால்நத்தம் தனியார் பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமை வகித்தார். ரத்த தான முகாமை, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவர்கள் ரத்த தானத்தை பெற்றுக்கொண்டனர். ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா, மாவட்ட வக்கீல் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.