/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறிவிக்கப்படாத மின்வெட்டு சி.ஐ.டி.யு., கண்டன ஆர்ப்பாட்டம்
/
அறிவிக்கப்படாத மின்வெட்டு சி.ஐ.டி.யு., கண்டன ஆர்ப்பாட்டம்
அறிவிக்கப்படாத மின்வெட்டு சி.ஐ.டி.யு., கண்டன ஆர்ப்பாட்டம்
அறிவிக்கப்படாத மின்வெட்டு சி.ஐ.டி.யு., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 07, 2024 01:00 AM
அறிவிக்கப்படாத மின்வெட்டு
சி.ஐ.டி.யு., கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம், நவ. 7-
குமாரபாளையம் நகரத்தில், வடக்கு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின், சி.ஐ.டி.யு., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அசோகன், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழக அரசே, இந்த மின்வெட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டால், பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மின்வெட்டு இல்லாத பகுதியாக மாற்றி கொடுக்க வேண்டும்,'' என்றார்.