/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கவனம் சிதறாமல் திறமையை முழுமையாக செலுத்தினால் கட்டாயம் வெற்றி பெற முடியும்'

ADDED : ஆக 29, 2024 07:52 AM
ராசிபுரம்: ''முழு ஈடுபாட்டோடு, கவனம் சிதறாமல் தங்களது திறமையை முழுமையாக செலுத்தினால், கட்டாயம் வெற்றி பெற முடியும்,'' என, கலெக்டர் உமா பேசினார்.
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரி ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக விடுதியில் தங்கி பயிலும், 34 மாணவியருக்கு, தையல், எம்பிராய்டரி பயிற்சி முகாம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
'நான் முதல்வன்' திட்டத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரி ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெண் குழந்தைகள் தங்கி பயில்கின்றனர். பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்க தையல் பயிற்சி உள்ளிட்ட தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக, விடுதியில் தங்கி பயிலும், 34 மாணவியருக்கு, தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மாணவ, மாணவியர் எந்த பிரிவில் கல்வி பயின்றாலும், முழு ஈடுபாட்டோடு, கவனம் சிதறாமல், தங்களது திறமையை முழுமையாக செலுத்தினால், கட்டாயம் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.