/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு
/
அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு
ADDED : ஜன 03, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு
குமாரபாளையம், ஜன. 3-
குமாரபாளையம், சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள போட்டோ பிரேம் கடை எதிரில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்றுமுன்தினம் காலை, 8:30 மணியளவில் மயக்க நிலையில் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் இவரை மீட்டு, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

