ADDED : அக் 17, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட 12 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு துாய்மை பணியில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில், 450 துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, புத்தாடைகளுடன் சீருடை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான விழா நாமக்கல்லில் உள்ள கவீன் கிேஷார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவக்குமார், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் துாய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் புத்தாடைகளை வழங்கினர்.