/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
15 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் முருகன் பெருமிதம்
/
15 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் முருகன் பெருமிதம்
15 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் முருகன் பெருமிதம்
15 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி பா.ஜ., மத்திய இணை அமைச்சர் முருகன் பெருமிதம்
ADDED : நவ 11, 2024 08:08 AM
ராசிபுரம்: ''உலகில், 15 கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி, பா.ஜ., தான்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
ராசிபுரத்தில், பா.ஜ., கட்சியின் மண்டல தேர்தல் குழு பயிலரங்கம் நடந்தது. இதில், கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். கட்சியின் நோக்கம், இலக்கு உள்ளிட்டவை குறித்து தலைவர்கள் பயிற்சியளித்தனர். மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:கடந்த செப்., 2ல் பிரதமர் மோடி தொடங்கிய உறுப்பினர் சேர்க்கை, நாடு முழுவதும் வேகமாக நடந்து வருகிறது. பா.ஜ.,வில், 10 கோடி உறுப்பினர்கள் இருந்தனர். 11 கோடி இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. தற்போது, 15 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். உலகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி, பா.ஜ., தான். பா.ஜ., உறுப்பினர்களுக்கு முதலில் நாடு, இரண்டாவது கட்சி, மூன்றாவது தான் குடும்பம்.
ஆனால், தி.மு.க.,விற்கு முதலில் குடும்பம், மற்றவை எல்லாம் அதற்கு பிறகு தான். வரும், 2026ல் தமிழகத்தில் நம்முடைய ஆட்சி வரவேண்டும். எப்படி செங்கோட்டையை பிடித்தோமோ, அதேபோல தமிழகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் நாம் பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நாமக்கல் நகர தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் சேதுராமன், ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிலரங்கில் கட்சியின் நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.