/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடை வீதியில் துார்வாராத சாக்கடையால் சுகாதார சீர்கேடு
/
கடை வீதியில் துார்வாராத சாக்கடையால் சுகாதார சீர்கேடு
கடை வீதியில் துார்வாராத சாக்கடையால் சுகாதார சீர்கேடு
கடை வீதியில் துார்வாராத சாக்கடையால் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 23, 2025 01:38 AM
நாமக்கல் :நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கடைவீதிக்கு செல்லும் பிரதான சாலையில் செங்கழநீர்
விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில், அரங்கநாதர் கோவில், குளக்கரை திடல், அரசு துவக்கப்பள்ளி மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், செங்கழநீர் விநாயகர் கோவில் எதிரே உள்ள வர்த்தக நிறுவனங்களின் வாசல் முன் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதில், நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் சென்றுவருகிறது. தற்போது, அந்த சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு
கள் அடைத்து, கழிவுநீர் வெளியேற முடியாமல் தேக்கமடைந்துள்ளது. அதனால் அப்பகுதி முழுவதும் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் மக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
மழை பெய்யும்போது, சக்கடை அடைத்து கழிவுநீருடன், மழைநீர் கடைகளுக்குள் புகுந்துவிடுகிறது. அதனால், சாக்கடையை துார்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்
பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.