/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
27ல் சாய் தபோவனத்தில் வருஷாபிஷேக விழா
/
27ல் சாய் தபோவனத்தில் வருஷாபிஷேக விழா
ADDED : ஆக 23, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், பரமத்தி அருகே, தொட்டிப்பட்டியில் பிரசித்தி பெற்ற சாய்தபோவனம் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, வரும், 27ல், 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு ஆரத்தியுடன் விழா தொடங்குகிறது. காலை, 5:00 மணிக்கு ஹோமம், 6:00 மணிக்கு கோபுர கலச அபிஷேகம், கூட்டு பிரார்த்தனை, நைவேத்தியும், ஆரத்தி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது.
முன்னதாக, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்று காலை, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை, சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.