/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அகோர மூர்த்தி கால பைரவருக்கு பூஜை
/
அகோர மூர்த்தி கால பைரவருக்கு பூஜை
ADDED : ஆக 23, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், ஆவணி மாத அமாவாசையையொட்டி, வெண்ணந்துார் யூனியன், கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில், அகோரமூர்த்தி காலபைரவருக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.
இதில், கல்லாங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், வெண்ணந்துார் சிவகுருநாத சுவாமி உடனுறை அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.