ADDED : டிச 29, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாசன் பிறந்தநாள் விழா
நாமக்கல், டிச. 29-
த.மா.கா., தலைவர் வாசனின், 60வது பிறந்த நாள் விழா, கிழக்கு மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாநகர தலைவர் சக்தி வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன், துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நாமகிரி தாயார் கோவிலில் சிறப்பு ஆராதனை, அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நாமகிரி தாயார் கோவில் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் என, மூன்று இடங்களில், அன்னதானம் வழங்கப்பட்டது. வட்டார தலைவர்கள் சின்னசாமி, ராமன், காமராஜ், நகர செயலாளர் சரவணன், மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.