/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் டிப்போ முன் வி.சி., ஆர்ப்பாட்டம்
/
பஸ் டிப்போ முன் வி.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2024 07:34 AM
திருச்செங்கோடு: வி.சி., தலைவர் திருமாவளவனின் உருவ படத்தை அவமானப்ப-டுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்-பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணியின், மாநில பேரவை தலைவர் அர்ஜுனன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து-கொண்டு, திருமாவளவனின் படத்தை அவமானப்படுத்திய நபர்-களை கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்-டத்தில், வி.சி., கட்சியின் நாமக்கல்
மேற்கு மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் ராஜேஷ்கண்ணா, மாநில பேரவை பொதுச்-செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து மாநில தொழிற்சங்க பேரவை
தலைவர் அர்ஜுனன் கூறும் போது, 'எங்கள் தலைவர் திருமாவளவனின் புகைப்படத்தை அவமானப்படுத்துவதால் அவரை சிறுமைப்படுத்தி விட முடியாது. அவர் புகழ் மென்-மேலும் பெருக தான் செய்யும்' என,
கேட்டுக்கொண்டனர்.